ராஷா ததானி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்


G.V.Prakash Kumar join AB4
x

இதில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.

சென்னை,

இயக்குநர் அஜய் பூபதி சமீபத்தில் தனது நான்காவது படத்தை அறிவித்தார், இதில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மகேஷ் பாபுவின் உறவினராவார்.

பலரும் எதிர்பார்த்ததுபோல, கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்காலிகமாக எபி4 எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் ராஷா ததானி தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். அவர் இதற்கு முன்பு ஆசாத்தில் நடித்திருந்தார், அதில் இடம்பெற்ற “உயி அம்மா” பாடலின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. சந்தமாமா கதலு பிக்சர்ஸ் சார்பில் ஜெமினி கிரண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

1 More update

Next Story