விவாகரத்து வதந்திகளுக்கு இடையே ஹன்சிகா வெளியிட்ட பதிவு - வைரல்


Hansika post amid divorce rumors
x
தினத்தந்தி 11 Aug 2025 6:30 PM IST (Updated: 11 Aug 2025 6:42 PM IST)
t-max-icont-min-icon

ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமீபத்தில் வெளியிட்ட பதிவு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சென்னை,

கடந்த சில நாட்களாக நடிகை ஹன்சிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும் விரைவில் விவாகரத்து பெறப் போவதாகவும் பரவி வருகின்றன.

இந்நிலையில் ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமீபத்தில் வெளியிட்ட பதிவு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் தனது பிறந்தநாளை (ஆகஸ்ட் 9 ) கொண்டாடிய அவர், இந்த ஆண்டு தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்ததாகவும் கூறினார்.

அவர் வெளியிட்ட பதிவில், "இந்த வருடம் (2025) பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. எனக்குள் எனக்குத் தெரியாத பலம் இருப்பதை எனக்கு உணர்த்தியுள்ளது. இந்த பிறந்தநாளில் உங்கள் அனைவரின் வாழ்த்துகளால் என் இதயம் நிரம்பி வழிகிறது.

சில நேரங்களில் சிறிய விஷயங்கள் கூட மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன. அனைவருக்கும் நன்றி "என்று தெரிவித்திருக்கிறார் . இதன் மூலம் ஹன்சிகாவின் விவாகரத்து விவகாரம் மீண்டும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நடிகை ஹன்சிகா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி சோஹைல் கட்டாரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. சோஹைல் , ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கி பஜாஜின் முன்னாள் கணவர் ஆவார்.

1 More update

Next Story