ஹரிஷ் கல்யாணின் ’எச்கே15’ - வெளியான டைட்டில் , பர்ஸ்ட் லுக் அப்டேட்


Harish Kalyans HK15 - Title, first look update
x

இப்படத்தை ‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார்.

சென்னை,

வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் புரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும் நாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. திங்க் ஸ்டுடியோஸ், இடா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின் படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கி தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியான பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

1 More update

Next Story