''படம் இல்லை...பதற்றம் இல்லை'' - சமந்தா


Heroine samantha intresting comments about her career and growth
x

''குஷி'' படத்திற்கு பிறகு சமந்தா, எந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய் தேவரகொண்டாவுடன் ''குஷி'' படத்தில் நடித்திருந்த சமந்தா, அதன் பிறகு எந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை.

"சுபம்"என்ற படத்தை தயாரித்து அதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

திரைப்படங்களைப் பொறுத்தவரை சமந்தா தனது ரசிகர்களிடமிருந்து விலகி இருந்தாலும், அவர் எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தனது ரசிகர்களுடன் உரையாடுவது மட்டுமல்லாமல், தன்னைப் பற்றிய அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.

சமீபத்தில் எஐஎம்எ-வில்(AIMA) நடந்த லீடர்ஷிப் மாநாட்டில் பேசிய சமந்தா, '' 2 வருடங்களாக என்னுடைய ஒரு படம் கூட வெளியாகவில்லை. என்னிடம் 1,000 கோடி ரூபாய் வசூலித்த படமும் இல்லை. ஆனால் நான் இதுவரை இருந்ததிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தற்போது எனக்கு எந்த பதற்றமும் அழுத்தமும் இல்லை'' என்றார்.

1 More update

Next Story