"ஹவுஸ் மேட்ஸ்" படத்தின் "மின்னலி" வீடியோ பாடல் வெளியீடு


தர்ஷன் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ பேண்டஸி ஹாரர் காமெடி படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

பேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் 'ஹவுஸ் மேட்ஸ்'.கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.ராஜவேல் எழுதி , இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தை பார்த்த முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படக்குழுவை வாழ்த்தி, பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

தர்ஷன் நடித்துள்ள 'ஹவுஸ் மேட்ஸ்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'அக்கலு பக்கலு' பாடல் வெளியாகி வைரலானது. தணிக்கை வாரியம் 'ஹவுஸ் மேட்ஸ்' படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைமிங் 2 மணிநேரம் 9 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 'ஹவுஸ் மேட்ஸ்' படத்தின் 'மின்னலி' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story