தேவையில்லாமல் அந்தப் படங்களில் நடித்துவிட்டேன் - பிரபல நடிகை வருத்தம்

இவர், கார்த்தி, சிவகார்த்திகேயன், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், நானி, நாக சைதன்யா போன்ற நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
I acted in those films unnecessarily - Famous actress regrets
Published on

சென்னை,

மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் கதாநாயகி, தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தனது அழகு மற்றும் நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்த இவர், கார்த்தி, சிவகார்த்திகேயன், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், நானி, நாக சைதன்யா போன்ற நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

சமீபத்தில், அவர் தேவையில்லாமல் சில படங்களில் நடித்ததாகக் கூறினார். அவர் யார் தெரியுமா?. அவர் வேறுயாறும் இல்லை, அனு இம்மானுவேல்தான்

இவர், நானி நடித்த மஜ்னு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே கவர்ந்த இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் இவர் துப்பறிவாளன், ஜப்பான், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில், ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் பிரண்ட் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில்,  அனு இம்மானுவேல், இனி வணிகப் படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டதாக கூறினார். அவர் கூறுகையில், நான் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், நானி, நாக சைதன்யா, கார்த்தி, சிவ கார்த்திகேயன் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்துள்ளேன்.. ஆனால் சில படங்களில் நடித்திருக்கக்கூடாது என்று நினைக்கிறேன் என்றார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வித்தியாசமான வேடங்களிலும் நடிக்க விரும்புவதாகவும் அனு கூறினார். இந்தக் கருத்துக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com