’ஜெயிலர் 2க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ - ரன்வீர் சிங்

சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த நடிகர் ரஜினிகாந்துக்கு கோவாவில் நேற்று சிறப்பு விருது வழங்கப்பட்டது.
சென்னை,
கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதனை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
இதில் சினிமாவில் பல்வேறு சாதனைகள் செய்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று சிறப்பு விருது அளித்து கவுரவிக்கப்பட்டார்.
இந்த விழாவில் நடிகர் ரன்வீர் சிங்கும் கலந்துகொண்டார். அப்போது ரஜினிகாந்துடன் மேடையை பகிர்ந்துகொண்டு பேசிய அவர், " ரஜினிகாந்தின் மகத்துவத்தைப் பற்றி பேச நான் மிகவும் சிறியவன் எனவும், ஜெயிலர் 2 க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று மட்டுமே சொல்ல முடியும் என்றும் கூறினார்
Related Tags :
Next Story






