''அவருடைய பெரிய ரசிகை...அதை சொன்னபோது அவர் ...'' - கல்யாணி பிரியதர்ஷன்


I am his big fan... - Kalyani Priyadarshan
x
தினத்தந்தி 13 Sept 2025 7:13 PM IST (Updated: 13 Sept 2025 7:18 PM IST)
t-max-icont-min-icon

சில வருடங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் கல்யாணி பிரியதர்ஷன் பேசிய வீடியோ ஒணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ''ஹலோ'' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு தமிழில் ஹீரோ மூலம் அறிமுகமானார். அதில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் கல்யாணி தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இப்போது அவரது ''லோகா சாப்டர் 1'' திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை, இது ரூ. 200 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் கல்யாணி பிரியதர்ஷன் பேசிய வீடியோ ஒணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் முன், தான் அவரது பெரிய ரசிகை என்றும், அதை அவரிடம் சொன்னபோது, ​​அவரால் நம்பவே முடியவில்லை என்றும் கூறினார்.

அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது சிரித்து கொண்டே இருப்போம் என்றும், அவரது நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறினார். ​​கல்யாணியின் இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story