''தி ராஜாசாப்' படத்தில் நான் 'பேய்' இல்லை' - நிதி அகர்வால்

ஹாரர் காமெடி கதைக்களத்தில் 'தி ராஜாசாப்' உருவாகிறது.
சென்னை,
பான் இந்திய நட்சத்திரமான பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் 'தி ராஜாசாப்'. ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை மாருதி இயக்கி வருகிறார். பொதுவாக, பெரிய ஹீரோக்கள் திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதனால் 'தி ராஜா சாப்' படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிழவுகிறது.
இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தநிலையில், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் தான் பேயாக நடிக்கவில்லை என்பதை நிதி அகர்வால் வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இது ஒரு திகில் கலந்த காதல் காமெடி படம். நான் இப்படத்தில் பேயாக நடிக்கவில்லை என்பதை ஆரம்பத்திலேயே கூறிக்கொள்கிறேன். எனது கதாபாத்திரத்தை பார்த்து மக்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைவார்கள் என்று நினைக்கிறேன்' என்றார்.






