’ராம் சரண் மீது எனக்கு உண்மையிலேயே வருத்தம்’ - ராம் பொதினேனி

ஜகபதி பாபுவின் ஜெயம்மு நிச்சயமு ரா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராம் பொதினேனி கலந்து கொண்டார்.
சென்னை,
ராம் பொதினேனி தற்போது ஆந்திரா கிங் தாலுகா என்ற படத்தில் நடித்துள்ளார். பாக்யஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் நவம்பர் 28-ம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில், ஜகபதி பாபுவின் ஜெயம்மு நிச்சயமு ரா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராம் பொதினேனி கலந்து கொண்டார். அபோது ராம் சரண் மீது இருக்கும் சுமை பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், ’சிரஞ்சீவி மாதிரி ஒரு அப்பா எனக்கு இருந்திருக்கலாம் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அது எனக்கு திரைத்துறையில் ஒரு பெரிய தளத்தை கொடுத்திருக்கும்.
ஆனால் பின்னர் புரிந்தது. ராம் சரண் மீது எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. நட்சத்திர வாரிசுகள் எவ்வளவு அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது’ என்றார்.
Related Tags :
Next Story






