'அதனால் அறையில் அழுது கொண்டே இருப்பேன்...' - லண்டனில் படித்ததை நினைவுகூர்ந்த சானியா ஐயப்பன்


I felt mentally depressed and would just cry in room: Saniya Iyappan
x
தினத்தந்தி 9 April 2025 8:43 AM IST (Updated: 9 April 2025 9:07 AM IST)
t-max-icont-min-icon

லண்டனில் உள்ள ஒரு நடிப்புப் பள்ளியில் படித்தபோது எதிர்கொண்டதை சானியா ஐயப்பன் நினைவுகூர்ந்திருக்கிறார்.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'குயின்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சானியா. இப்படத்திற்காக அவருக்கு பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, 'பிரேதம் 2' , 'லூசிபர்' , 'சல்யூட்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழில் இறுகப்பற்று' , 'சொர்க்கவாசல்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், லண்டனில் உள்ள ஒரு நடிப்புப் பள்ளியில் படித்தபோது எதிர்கொண்டதை சானியா ஐயப்பன் நினைவுகூர்ந்திருக்கிறார். அவர் கூறுகையில்,

"நான் லண்டனில் படிக்க சென்ற முதல் நாளிலிருந்தே பேராசிரியரின் நடத்தை சற்று எதிர்மறையாக இருந்ததை உணர்ந்தேன். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்வில்லை. நாட்கள் கடந்தன, ஆனாலும், யாரும் என்னிடம் பேச முயற்சிக்கவில்லை.

ஒரு நாள் மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிய வேண்டிய நேரம் வந்தது, அப்போது யாருமே என்னை குழுவில் சேர்ந்துகொள்ள விரும்பவில்லை. முதலில், ஏன் என்று எனக்கு தெரியவில்லை, பின்னர்தான் அது எதற்காக என்பதை உணர்ந்தேன். இதனால், எனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் அறையில் தனியாக அழுது கொண்டே இருப்பேன்' என்றார்.

சானியா கடந்த 2023ம் ஆண்டு லண்டனில் படைப்பாற்றல் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தில் நடிப்பு மற்றும் செயல்திறன் பிரிவில் மூன்று ஆண்டு இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தார்.

1 More update

Next Story