'காய்ச்சலில் நடுங்கும்போது கூட...அவர் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்' - கல்யாணி பிரியதர்ஷன்


‘I have seen my father work even while shivering with fever’: Kalyani Priyadarshan
x
தினத்தந்தி 19 May 2025 12:57 PM IST (Updated: 19 May 2025 1:05 PM IST)
t-max-icont-min-icon

கல்யாணி பிரியதர்ஷன் தற்போது பகத் பாசிலுடன் ' ஓடும் குதிரை சாடும் குதிரை' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தற்போது பகத் பாசிலுடன் ' ஓடும் குதிரை சாடும் குதிரை' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது தந்தையும் புகழ்பெற்ற இயக்குனருமான பிரியதர்ஷனுடன் நகைச்சுவைப் படம் பண்ண விரும்புகிறீர்களா ? என்ற கேள்விக்கு கல்யாணி பதிலளித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

"எனக்கு நகைச்சுவை படங்களில் நடிக்க பிடிக்கும். என் தந்தையின் படங்களை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். ஆனால் இன்று அதே போன்ற படங்கள் எடுத்தால் வேலை செய்யுமா? என்று எனக்குத் தெரியவில்லை. நகைச்சுவை தலைமுறைகளுக்கு ஏற்ப மாறுகிறது.

எனக்கு காமெடியாக தோன்றுவது என் சகோதரருக்கு தெரியாது. அவருக்கு காமெடியாக தெரிவது எனக்கு தெரியாமல் போகலாம். ஒவ்வொருவரின் நகைச்சுவை உணர்வும் வித்தியாசமானது" என்றார்.

தொடர்ந்து தனது தந்தையைப் பற்றி அவர் பேசுகையில், "என் தந்தையின் கடின உழைப்பை நான் பார்த்திருக்கிறேன். காய்ச்சலில் நடுங்கும்போது கூட அவர் வேலைக்கு செல்வார். அவர் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்' என்றார்.

1 More update

Next Story