‘ரேச்சல்’ படத்திற்காக ஒரு வாரம் அதை கற்றுக் கொண்டேன்- நடிகை ஹனிரோஸ்

நடிகை ஹனிரோஸ் நடித்துள்ள ‘ரேச்சல்’ படம் வருகிற டிசம்பர் 6-ந்தேதி வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹனிரோஸ். தற்போது மலையாளத்தில் உருவாகி உள்ள ‘ரேச்சல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். கறி வெட்டும் தொழிலாளியாக படத்தில் நடித்துள்ள ஹனிரோஸ் தோற்றம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
இப்படம் வருகிற டிசம்பர் 6-ந்தேதி படம் 5 மொழிகளில் திரைக்கு வரும் நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஹனிரோஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
எனது 20 வருட திரை வாழ்க்கையில் முதன்மை கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை. அழுத்தமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தின் கதாபாத்திரத்திற்காக சுமார் 1 வாரம் இறைச்சி வெட்டுவது பற்றி படித்தேன். மிகவும் கடின உழைப்பு தேவைப்படும். பயங்கரமான கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிக்க வேண்டியதிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






