விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்-நடிகர் அஜித் விளக்கம்

''எனது பேட்டி திரித்து கூறப்பட்டு விட்டது. விஜய்க்கு எப்போதுமே நல்லதே நினைத்து இருக்கிறேன்'' என்றும் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை,

கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சேகத்தை ஏற்படுத்தியது. கரூர் விவகாரம் குறித்து நடிகர் அஜித்குமார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வைரலானது.

அஜித் கூறுகையில்,''கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது" என்றார்.

நடிகர் அஜித் குமாரின் இந்த கருத்து பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் அஜித் விஜய்க்கு ஆதரவாக பேசினார் என்றும், இன்னொரு தரப்பினர் விஜய்க்கு எதிராக இந்த கருத்து உள்ளதாக கூறியதால் விமர்சனங்கள் எழுந்தன. விவாதங்களும் எழுந்தன. இதற்கிடையில் இதுகுறித்து அஜித்குமாரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.

இதற்கு முன்பு ஆந்திரா சினிமா தியேட்டரில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. பல நாடுகளில் நடந்துள்ளது. பெதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உள்பட அனைவருக்கும் பெருந்தும். எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்து கெள்ளப்படாது என்று நம்புகிறேன். ஒரு சிலர் ரசிகர்கள் மீது பழியை சுமர்த்துகிறார்கள்.எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன். எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சந்தேஷமாக வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com