"நா சொல்றேன்.. டைம் கிடைச்சா பாருங்க"- நடிகர் சிலம்பரசனின் வைரல் பதிவு

"அரசன்" படத்தின் புரோமோ வீடியோ இன்று வெளியாக உள்ளது.
"நா சொல்றேன்.. டைம் கிடைச்சா பாருங்க"- நடிகர் சிலம்பரசனின் வைரல் பதிவு
Published on

சென்னை,

சிலம்பரசன் "தக் லைப்" திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் "அரசன்" என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் புரோமோ வீடியோ இன்று (16ந் தேதி) மாலை 06.02 மாலை மணியளவில் தியேட்டர்களிலும், நாளை (17ந் தேதி) காலை 10,06 மணியளவில் யூடியூப் தளத்திலும் வெளியாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புரோமோ விடியோ குறித்து நடிகர் சிலம்பரசன் பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "வெற்றி மாறன் சாரின் அரசன் புரோமோவை தியேட்டர் வெர்ஷனில் மியூசிக்கோடு பார்த்தேன்.. நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பாருங்க. தியேட்டரிகல் எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.." என்று கூறியுள்ளார். சிலம்பரசனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com