’அந்த வகையில் 'டகோயிட்' எனது முதல் திரைப்படம்’ - மிருணாள் தாகூர்

இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் தற்போது ஷானெல் தியோ இயக்கத்தில் "டகோயிட்" என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதில் அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது.
நேற்று இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். அப்போது மிருணாள் தாகூர் பேசுகையில்,
’நான் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடித்த முதல் திரைப்படம் 'டகோயிட்' . ஆதிவி சேஷுடன் பணியாற்றியது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. அனுராக் சாருடன் எனக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும், அவருடம் நடித்த காட்சிகள் அனைத்தும் அருமையாக இருந்தன’ என்றார்.






