'அமரன்' படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. கோவா புறப்பட்ட சிவகார்த்திகேயன்


அமரன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. கோவா புறப்பட்ட சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 20 Nov 2025 1:05 PM IST (Updated: 20 Nov 2025 1:06 PM IST)
t-max-icont-min-icon

இந்த படத்திற்கு 'கோல்டன் பீக்காக்' (Golden Peacock Award) விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India) ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் இன்று கோலாகலாக தொடங்கி உள்ளது. இந்த விழா வருகிற 28ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவில் , 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த 'அமரன்' படம் 'ஓபன் பீட்சர் பிலிம்' (Opening Feature Film) பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது. இதுகுறித்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிர்காரபூர்வமாக அறிவித்துள்ளது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி உருவான இந்த படத்திற்கு 'கோல்டன் பீக்காக்' (Golden Peacock Award) விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்னை விமான நிலையில் இருந்து புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர்.

1 More update

Next Story