நஸ்லெனின் 'ஆலப்புழா ஜிம்கானா'...ஓடிடியில் வெளியாவது எப்போது?


Is Naslen’s latest sports drama releasing on OTT on this date?
x
தினத்தந்தி 26 May 2025 7:19 AM IST (Updated: 7 Jun 2025 12:14 PM IST)
t-max-icont-min-icon

நஸ்லென் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'ஆலப்புழா ஜிம்கானா'.

சென்னை,

'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமான நஸ்லென் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனகா ரவி , கோட்டயம் நஸீர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் கடந்த மாதம் 10-ந் தேதி வெளியானது.

மம்முட்டியின் ‛உண்ட' மற்றும் டொவினோ தாமஸின் ‛தள்ளுமால' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் பல மொழிகளில் சோனி லிவ் தளத்தில் ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1 More update

Next Story