மீண்டும் தள்ளிபோகிறதா பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே' திரைப்படம்

'எல்ஐகே' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் வருகிற 18ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்துடைய ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 12 அல்லது 13 தேதிகளில் இப்படம் வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது.






