அரசியலுக்கு வருகிறாரா சூர்யா? - ரசிகர் மன்றம் விளக்கம்


Is Suriya entering politics? - Fan club explains
x
தினத்தந்தி 20 Aug 2025 2:11 PM IST (Updated: 20 Aug 2025 4:29 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போவதாக தகவல் பரவி வருகிறது.

சென்னை,

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக வெளியான தகவலுக்கு இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

''ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைதள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள். சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துகளோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம், நன்றி'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story