யாஷ் நடிக்கும் “டாக்ஸிக்” படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறதா? - படக்குழு விளக்கம்


யாஷ் நடிக்கும் “டாக்ஸிக்” படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறதா? - படக்குழு விளக்கம்
x
தினத்தந்தி 30 Oct 2025 4:15 PM IST (Updated: 9 Dec 2025 1:23 PM IST)
t-max-icont-min-icon

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படம் மார்ச் 19-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

மும்பை,

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டு, பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதியாக இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தற்போது கீத்து மோகன்தாஸ் இயக்கி வரும் இப்படத்தின் காட்சிகளைப் படக்குழு பார்த்திருக்கிறது. இதில் சில காட்சிகள் கமர்ஷியலாக தனக்கு ஏற்றவகையில் இல்லை என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார் யாஷ். இதனால் அக்காட்சிகளை மீண்டும் படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே, படத்தின் பொருட்செலவு திட்டமிட்டதை தாண்டி போய்விட்டதால் தயாரிப்பு நிறுவனமும் தயங்கி வருகிறது. இதன் இறுதி முடிவு என்னவென்பது தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும். அதற்குப் பிறகே, ‘டாக்சிக்’ ரிலீஸ் குறித்து திட்டமிடப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், ‘டாக்சிக்’ படம் அடுத்தாண்டு மார்ச் 19-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து படக்குழு எக்ஸ் தளத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

1 More update

Next Story