ஷங்கரின் "வேள்பாரி" பட நாயகன் இவரா? வெளியான தகவல்


ஷங்கரின் வேள்பாரி பட நாயகன் இவரா? வெளியான தகவல்
x

வேள்பாரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2026 ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கும்.

சென்னை,

எந்திரன், சிவாஜி உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் சங்கர். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகியவை தோல்வியை சந்தித்தன.

இதற்கிடையில், இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவல் இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இப்படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, வேள்பாரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2026 ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் என்றும், இதில் நாயகனாக சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story