"தமிழ் சினிமாவில் படம் எடுத்து வெளியிடுவது ரொம்ப சிரமம்" - பா.ரஞ்சித்

'கிங்ஸ்டன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
சென்னை,
ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள 'கிங்ஸ்டன்' படம் வருகிற மார்ச் 7ம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட இயக்குனர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது பா.ரஞ்சித் பேசுகையில்,
'நிச்சயம் மக்களுக்கு இந்தபடம் பிடிக்கும். ஏனென்றால், டிரெய்லர் அந்த அளவிற்கு அருமையாக உள்ளது. தமிழ் சினிமாவில் படம் எடுத்து வெளியிடுவது ரொம்ப சிரமம். சவாலான நிலை தொடர்ந்து இருக்கிறது. இந்த நேரத்தில் இது மாதிரியான கதையை நம்பி படம் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம். அதை அடைய போராடிக்கொண்டிருக்கும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்' என்றார்.
Related Tags :
Next Story






