‘கைதி’ திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு!


‘கைதி’ திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு!
x

லோகேஷ் கனகராஜுடைய சினிமாட்டிக் யுனிவர்ஸில் (LCU) கைதி திரைப்படம் முக்கியமான ஒன்றாகும்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் கைதி. இந்த படத்தில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் விறுவிறுப்பாக காட்சிகள் அமைத்து இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்கி இருந்தார். இந்த திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜுடைய சினிமாட்டிக் யுனிவர்ஸில் (LCU) கைதி திரைப்படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது.

இந்த நிலையில், கைதி படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கார்த்தியின் வெற்றிப் படங்களில் இப்படத்திற்கு தனி இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story