மலேசியாவில் ‘ஜன நாயகன்’...விஜய்க்கு உற்சாக வரவேற்பு


Jananaayagan Vijay in Malaysia... received a warm welcome at the airport
x

‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இந்த நிலையில், நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் நடிகர் விஜய் மலேசியா சென்றுள்ளார். அவருக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகியோரும் இந்த இசை வெளியீட் விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது

1 More update

Next Story