ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த ஜான்வி கபூர்


Janhvi Kapoor scores a hattrick of underperformers in 2025
x
தினத்தந்தி 6 Oct 2025 7:45 PM IST (Updated: 6 Oct 2025 7:45 PM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டில் இதுவரை ஜான்வி கபூரின் 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.

மும்பை,

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். ஆனால் அவரது நட்சத்திர அந்தஸ்து இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் அவருக்கு உதவவில்லை.

அவரது கவர்ச்சி மட்டும் திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை ஈர்க்க போதுமானதாக இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை அவரது மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. அவை அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன.

மூன்று படங்களில் முதலாவதாக திரைக்கு வந்த படம் "பரம் சுந்தரி". சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வி அடைந்தது. இது இந்தியாவில் சுமார் ரூ. 50 கோடி வசூலை ஈட்டியது.

அடுத்ததாக ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஹோம்பவுண்ட்'. பல திரைப்பட விழாக்களில் வெளியாகி கைத்தட்டல்களை பெற்ற இந்த படம் திரையரங்குகளில் கைத்தட்டல்களை பெறவில்லை.

அவரது மூன்றாவது படம் "சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி" . இந்த படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்தார். இப்படம் இதுவரை ரூ.30 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மூலம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்திருக்கிறார் ஜான்வி கபூர்.

1 More update

Next Story