ராஷா ததானியின் அடுத்த படம்...டைட்டில் அறிவிப்பு

ராஷா ததானி, தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி. இவர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி வெளியான 'ஆசாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதில் இடம் பெற்ற "உயி அம்மா" பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதற்கிடையில், ராஷா ததானி, தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபுவின் மகன் ஜெயகிருஷ்ணா இதில் .கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தை அஜய் பூபதி இயக்குகிறார். சந்தமாமா கதலு பிக்சர்ஸ் சார்பில் ஜெமினி கிரண் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ஸ்ரீனிவாசமங்காபுரம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






