ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஜோதிகா

’டோலி சஜா கே ரஹ்னா’ என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா
சென்னை,
ஜோதிகா 1997-ல் வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு இந்தி படங்களில் அவர் நடிக்கவில்லை. தமிழில் 1999-ல் நடித்த வாலி படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் படங்களிலேயே நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்தியில் அஜய்தேவ்கனுடன் சைத்தான், ராஜ்குமார் ராவுடன் ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தரற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Related Tags :
Next Story






