'இந்தியன் 2' படத்தின் "கதறல்ஸ்" லிரிக் வீடியோ நாளை வெளியாகிறது

இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த பாடல் இசை வெளியீட்டின்போதே சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
'இந்தியன் 2' படத்தின் "கதறல்ஸ்" லிரிக் வீடியோ நாளை வெளியாகிறது
Published on

சென்னை,

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில், 'இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இது 'இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடல் ஆகும். இசை வெளியீட்டின்போதே இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

அந்த வகையில், இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 'இந்தியன் 2' படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com