மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்

உன் தாயின் பச்சை நிற கண்களை நான் பார்த்து இவ்வளவு அற்புதமான பரிசாக உன்னை கொடுத்ததற்கு நன்றி சொன்னேன் என்று அக்‌ஷராவுக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்
Published on

கமல்ஹாசனின் 2வது மகளான அக்ஷரா ஹாசன் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். அஜித்தின் விவேகம், விக்ரமின் கடாரம் கொண்டான் படங்களில் நடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் மற்றும் தனுஷூடன் சேர்ந்து நடித்துள்ளார். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற படத்தில் நடித்திருந்த அக்ஷரா அடுத்து அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையே அக்ஷரா ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், டியர் அக்ஷரா, நீ பிறந்தபோது நான் முதன்முதலில் உன் கண்களைப் பார்க்கவில்லை.நீ உறங்கிக் கொண்டிருந்தாய். உன் தாயின் பச்சை நிற கண்களை நான் பார்த்து இவ்வளவு அற்புதமான பரிசாக உன்னை கொடுத்ததற்கு நன்றி சொன்னேன். அப்போது, உன் அம்மா உனக்கு அவரின் கண்கள் இருப்பதாக என்னிடம் கூறினார். பின்னர் உற்றுப் பார்த்தபோது எனது பழுப்பு நிறமும் சிறிதளவு அதில் கலந்திருப்பதைக் கண்டேன். இவை, பெற்றோர்கள் குழந்தைத்தனமாக உரிமை கொண்டாடும் சிறிய ஒற்றுமைகள்.

உருவத்திலும் சரி, சிந்தனையிலும் சரி நீ ஒரு அழகான மனிதராக வளர்ந்துவிட்டாய். அதேநேரம், உனக்குள்ளிருக்கும் குழந்தையையும் நீ பாதுகாத்து வைத்திருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தக் குழந்தையும் என்னுடையதுதான். அக்குழந்தையை பத்திரமாகக் காப்பாற்றிக்கொள். பிறந்தநாள் வாழ்த்துகள், அக்ஷரா! என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com