கங்குவா படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

கங்குவா திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. 'கங்குவா' படத்தை கடந்த மாதம் 10-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், ரஜினியின் 'வேட்டையன்' திரைப்படம் அந்த நாளில் வெளியானதால் படத்தின் ரிலீசை தள்ளி வைத்தனர்.

இதையடுத்து 'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தற்போது 'கங்குவா' திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com