'கண்ணப்பா'- நட்சத்திரங்களின் திரை நேரம் குறித்து பேசிய விஷ்ணு மஞ்சு


Kannappa - Vishnu Manju talks about the screen time of the stars
x

இதில், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால், பிரபாஸ் மற்றும் அக்சய் உள்ளிட்ட நட்சத்திரங்களின் திரை நேரம் குறித்து விஷ்ணு மஞ்சு பேசினார். அவர் கூறுகையில், "பெரிய நட்சத்திரங்கள் என்ற பெயருக்காக கேமியோ ரோலில் 2-3 நிமிடங்கள் மட்டுமே அவர்கள் படத்தில் வருவார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறு. படத்தை பார்த்த பிறகு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களைவிட அவர்களுக்கு இதில் அதிக ஸ்கோப் கொடுக்கப்பட்டுள்ளது என்று நிச்சயமாக சொல்வீர்கள்' என்றார்.

1 More update

Next Story