திருமண வாழ்வில் நுழைந்த 'கே.ஜி.எப்' பட பாடகி...குவியும் வாழ்த்து

'கே.ஜி.எப்' படத்தில் மெஹபூபா, தீரா தீரா உள்ளிட்ட பாடல்களை இவர் பாடினார்.
திருப்பதி,
'கே.ஜி.எப்' படத்தில் பணியாற்றிய ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் மற்றும் பலர் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். இதன் 2 பாகங்களிலும் பெரும்பாலான பாடல்களைப் பாடிய பாடகி அனன்யா பட். தற்போது அவர் மிகவும் எளிமையான் முறையில் திருமலையில் திருமணம் செய்து கொண்டார்
அவர் டிரம்மர் மஞ்சுநாத்தை திருமணம் செய்து கொண்டார். திருமலையில் நடந்த இந்த சுப நிகழ்வில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். அனன்யா தனது திருமணம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அனன்யா 'கே.ஜி.எப்' படத்தில் மெஹபூபா, தீரா தீரா உள்ளிட்ட பாடல்களைப் பாடினார். இது தவிர, புஷ்பா' படத்தின் கன்னட பதிப்பில் 'சாமி சாமி' பாடலையும் இவர்தான் பாடியிருந்தார். சமீபத்தில், 'ஷஷ்டிபூர்த்தி மற்றும் 'கரிவிடி லட்சுமி' ஆகிய தெலுங்கு படங்களிலும் பாடல்களைப் பாடினார்.






