“மாஸ்க்” படத்தின் அனுபவத்தை பகிர்ந்த கவின்

கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மாஸ்க்’ படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது.
“மாஸ்க்” படத்தின் அனுபவத்தை பகிர்ந்த கவின்
Published on

அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. 

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விஜய் சேதுபதி, நெல்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கவின் பேசுகையில், என் வாழ்க்கையில் நான் நம்பும் விசயம், அன்றன்று நாள் நல்லபடியாக போக வேண்டும் என்பது தான், அதில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவின் பீட்சா படத்தில் தான் அறிமுகமானேன். வெற்றிமாறன் சார் என்னை கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார். நெல்சன் அண்ணன் வாழ்க்கையில் என்னைச் சரியாக வழிநடத்தி என்னைக்கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு நன்றி. படம் நவமபர் 21 ம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com