கர்ப்பமாக இருப்பதாக பரவிய வதந்தி - மவுனம் கலைத்த பாடகி கெனிஷா

கெனிஷா சமீபத்தில் தனது இசை வீடியோ ''அன்றும் இன்றும்''-ல் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
சென்னை,
பாடகி கெனிஷா பிரான்சிஸ், சமீபத்திய பேட்டியில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்தார்.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்யும் நிலையில் உள்ளார். ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையிலான பிளவுக்கு பாடகி கெனிஷாதான் காரணம் என்று அவரைக் குறை கூறி வரும்நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில், கெனிஷா இதற்கு கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், "நான் கர்ப்பமாக இருப்பதாக பலர் கூறுகிறார்கள். எனக்கு சிக்ஸ் பேக் கிடையாது, அதேபோல் நான் கர்ப்பமாகவும் இல்லை' என்றார்
கெனிஷா சமீபத்தில் தனது இசை வீடியோ ''அன்றும் இன்றும்''-ல் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து பலர் கெனிஷா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் பேச தொடங்கினர்.
Related Tags :
Next Story