கேஜிஎப் நடிகர் யாஷின் அம்மா போலீசில் புகார்


KGF actor Yashs mother files police complaint
x

யாஷின் அம்மா புஷ்பலதா, பிஏ புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார்.

சென்னை,

கேஜிஎப் நடிகர் யாஷின் அம்மா புஷ்பலதா போலீசில் புகாரளித்துள்ளார்.

அவர் தயாரித்த ’கொந்தலவாடி’ திரைப்படம் தொடர்பாக படத்தின் விளப்பரதாரர் ஹரிஷ் மீது பெங்களூருவில் உள்ள ஹை கிரவுண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனது புகாரில் ரூ.65 லட்சம் ஏமாற்றப்பட்டதாகவும், மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புஷ்பலதா தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பான் இந்தியா நட்சத்திரம் யாஷின் அம்மா புஷ்பலதா, பிஏ புரொடக்சன்ஸ் என்ற தனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார். அவரது முதல் படம் கொத்தலவாடி என்ற திரைப்படமாகும். இந்தப் படத்தை ஸ்ரீ ராஜ் இயக்கியுள்ளார். கன்னட நடிகர் பிருத்வி அம்பர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

1 More update

Next Story