ஷாருக்கானின் ’கிங்’...டைட்டில் டீசர் வெளியீடு

இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை,
ஷாருக்கானின் பிறந்த்நாளை முன்னிட்டு கிங் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது 'வார் மற்றும் பதான்' படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு கிங் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனுடன் இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஷாருக்கான் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






