விஜய் தேவரகொண்டாவின் "கிங்டம்" படத்திற்கு "யு/ஏ" தணிக்கை சான்றிதழ்


விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்
x

விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ நடித்துள்ள ‘கிங்டம்’ படம் வருகிற 31ந் தேதி வெளியாக உள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

இதற்கிடையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்த நிலையில், தயாரிப்பாளர்கள் இறுதியான ரிலீஸ் தேதி அறிவித்து புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதன்படி, இப்படம் வருகிற 31ந் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'கிங்டம்' படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு வெளியாக உள்ளது.

1 More update

Next Story