கிருஷ்ணாவின் `தி மம்மி ரிட்டர்ன்ஸ்' படம்... பூஜையுடன் துவக்கம்


Krishnas The Mummy Returns... launched with a puja ceremony
x

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.

சென்னை,

கிருஷ்ணா நடிக்கும் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த பேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் பட பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.

1 More update

Next Story