புதிய படத்தில் இணைந்த 'குடும்பஸ்தன்' பட நடிகை


புதிய படத்தில் இணைந்த குடும்பஸ்தன் பட நடிகை
x

சாந்தி டாக்கிஸ் அருண் விஸ்வா தயாரிக்கும் இந்த படத்திற்கு புரொடக்‌ஷன் நம்பர்-4 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளிவந்த 'குடும்பஸ்தன்' படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் சான்வி மேகனா. இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் பைனலி பாரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சாந்தி டாக்கிஸ் அருண் விஸ்வா தயாரிக்கும் இந்த படத்திற்கு புரொடக்‌ஷன் நம்பர்-4 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா கூறுகையில், புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாக கொண்டிருக்கிறோம். அந்த வகையில் பைனலி பாரத், டீன் ஏஜ் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் வெகுபரிட்சயமானவர். அதுபோன்று குடும்பஸ்தன் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷான்வி மேக்னாவும் நடிப்பது மகிழ்ச்சி. பாலசரவணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story