திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு - ரஜினிக்கு வாழ்த்து சொன்ன லோகேஷ்


Lokesh congratulates Rajini on completing 50 years in the film industry
x

இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 170 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன

சென்னை,

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். தற்போது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழும் இவர், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியுடன் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் 170 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. 'கூலி' திரைப்படம் அவரது 171-வது திரைப்படமாகும்

இந்த நிலையில், ரஜினிக்கு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“என்னுடைய திரைப்பயணத்தில் 'கூலி' எப்போதும் ஸ்பெஷலான படமாக இருக்கும். ரஜினிகாந்த் சார்... உங்களுடன் இருந்த தருணங்களை எப்போதும் என்னால் மறக்க முடியாது. எங்களை ஊக்குவித்து கொண்டே இருப்பதற்காக நன்றி'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story