''தலைவன் தலைவி'' படத்துடன் மோதும் ''மாரீசன்''...டிரெய்லர் எப்போது?

இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
பகத் பாசில் , வடிவேலு நடித்துள்ள ''மாரீசன்'' படமும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள ''தலைவன் தலைவி'' படமும் ஒரே நாளில் திரைக்கு வருகிறது.
மாரி செல்வராஜின் ''மாமன்னன்'' படத்திற்குப் பிறகு பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள இரண்டாவது படம் ''மாரீசன்''. இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி மற்றும் நேரம் என்ன என்பதை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டிரெய்லர் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகிறது.
இதில், பகத் பாசிலின் நண்பராக விவேக் பிரசன்னாவும், போலீஸ் அதிகாரிகளாக பி.எல்.தேனப்பனும் கோவை சரளாவும் நடித்துள்ளனர். மேலும், சித்தாரா, லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, ரேணுகா, கிருஷ்ணா, டெலிபோன் ராஜா மற்றும் ஹரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Related Tags :
Next Story






