"மகாவதார் நரசிம்மா" படத்திற்கு ''யு/ஏ'' சான்று...திரைக்கு எப்போது வருகிறது?

'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்'-ன் கீழ் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்கள் உருவாகின்றன.
சென்னை,
'மகாவதார் நரசிம்மா' படத்திற்கு தணிக்கை வாரியம் "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. அஸ்வின் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் கிளீம் புரொடக்சன்ஸ் ஆகியவை 'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்'-ன் கீழ் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்களை தயாரிக்கின்றன.
அதன்படி, மகாவதார் நரசிம்மா (2025 ), மகாவதார் பரசுராம் (2027 ), மகாவதார் ரகுநந்தன் (2029 ), மகாவதார் துவாரகாதீஷ் (2031), மகாவதார் கோகுல நந்தா (2033 ), மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035 ), மகாவதார் கல்கி பார்ட் 2 (2037) ஆகிய வரிசையில் படங்களை வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் முதல் படமான 'மகாவதார் நரசிம்மமா' வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story






