''சயாரா''வைப் பாராட்டும் மகேஷ் பாபு

தனக்குப் பிடித்த படங்களை சமூக ஊடகங்களில் வெளிப்படையாகப் பாராட்டுபவர்களில் ஒருவர் மகேஷ் பாபு.
சென்னை,
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, திரைப்படங்களைப் பார்த்து அதில் தனக்குப் பிடித்த படங்களை சமூக ஊடகங்களில் வெளிப்படையாகப் பாராட்டுபவர்களில் ஒருவர்.
அந்தவகையில், தற்போது இந்தி திரைப்படமான சயாராவைப் பார்த்து, அதைப் பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,
''சாய்ரா'' குழுவுக்கு வாழ்த்துகள். சிறந்த கதைசொல்லல், தனித்துவமான நடிப்பு ஆகியவற்றுடன் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அஹான் பாண்டே மற்றும் அனீத்பட்டா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியான படம்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மகேஷ் பாபு புதிய நடிகர்களையும் நல்ல கதைசொல்லலையும் பாராட்டுவதைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
Related Tags :
Next Story






