மம்முட்டி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்முட்டி கூட்டணி 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் மம்முட்டி, தற்போது பேட்ரியாட் எனும் அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய 'அனந்தரம்', 'மதிலுகள்', 'விதேயன்' ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக 2016-ல் பின்னேயும் என்கிற மலையாள திரைப்படத்தை இயக்கியிருந்தார். இவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்லையில், அடூர் கோபாலகிருஷ்ணன் மம்முட்டியை வைத்து இயக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘பாதயாத்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம், தகாழி சிவசங்கரப் பிள்ளையின் ‘ரண்டிடங்கழி’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. கதையை அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கே.வி.மோகன் குமார் இணைந்து எழுதியுள்ளனர்.






