சொன்னதை செய்த பிரபாஸ்...ஜப்பான் ரசிகர்கள் கொண்டாட்டம்


Man of His Word: Prabhas to Visit Japan on December 5 – Here’s Why
x
தினத்தந்தி 18 Nov 2025 7:45 PM IST (Updated: 18 Nov 2025 7:51 PM IST)
t-max-icont-min-icon

பாகுபலி படங்கள், பாகுபலி: தி எபிக் என்ற பெயரில் ஒரே படமாக சமீபத்தில் வெளியானது.

சென்னை,

பிரபாஸின் பிளாக்பஸ்டர் படமான பாகுபலி படங்கள், பாகுபலி: தி எபிக் என்ற பெயரில் ஒரே படமாக சமீபத்தில் இந்தியாவில் வெளியானது. இந்நிலையில், எஸ்.எஸ். ராஜமவுலியின் இந்த படம் ஜப்பானில் வெளியாக உள்ளது.

பாகுபலி: தி எபிக் திரைப்படம் ஜப்பானில் டிசம்பர் 12-ம் தேதி வெளியாக உள்ளது. பிரபாஸ் டிசம்பர் 5 அன்று தயாரிப்பாளர் ஷோபு யார்லகடாவுடன் சிறப்பு பிரீமியரில் கலந்து கொள்கிறார்.

கடந்த ஆண்டு, ஜப்பானில் கல்கி 2898 ஏடி பிரீமியரில் பிரபாஸால் கலந்து கொள்ள முடியவில்லை, ஆனால், விரைவில் ரசிகர்களைப் பார்ப்பதாக உறுதியளித்தார். இப்போது அவர் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி உள்ளார்.

பிரபாஸ் தற்போது பவுஜி படத்தில் நடித்து வருகிறார், மேலும் இந்த மாத இறுதியில் ஸ்பிரிட் படப்பிடிப்பை தொடங்குவார். இதற்கிடையில், பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாகிறது.

1 More update

Next Story