மீண்டும் மல்டி ஸ்டார் படம் இயக்கப்போகிறாரா மணிரத்னம்?


Mani Ratnam plans a quick film after Thug Life
x

மணிரத்னம் தற்போது 'தக்லைப்' படத்தை கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் இயக்கி இருக்கிறார்.

சென்னை,

'செக்கச் சிவந்த வானம்' படத்தை அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் என மல்டி ஸ்டார்களை வைத்து இயக்கிய மணிரத்னம், அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் இயக்கினார்.

தற்போது தக்லைப் படத்தை கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் இயக்கி இருக்கிறார். இதையடுத்து தனது புதிய படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கப் போவதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், புதுமுகங்களை வைத்து மணிரத்னம் படம் இயக்க வாய்ப்பில்லை என்றும், அவரது அடுத்த படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் மல்டி ஹீரோ கதையில்தான் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story