அடுத்து காதல் படமா? - மணிரத்னம் கொடுத்த முக்கிய அப்டேட்

மணிரத்னம், தனது அடுத்த படம் ஒரு காதல் கதை என்ற தகவலை நிராகரித்துள்ளார்.
சென்னை,
பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது தனது புதிய படமான 'தக் லைப்' புரமோசனில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு, மணிரத்னம் அடுத்ததாக நவீன் பாலிஷெட்டி மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோரை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
இந்நிலையில், மணிரத்னம் தனது அடுத்த படம் ஒரு காதல் கதை என்ற தகவலை நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"இல்லை. அவர்கள் எதை வைத்து இப்படி பேசுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் இரண்டு ஸ்கிரிப்ட்களில் பணிபுரிந்து வருகிறேன், ஆனால் எது நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை" என்றார்
Related Tags :
Next Story






