'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனரின் அடுத்த படம்.. படப்பிடிப்பு பணிகள் நிறைவு

புதுமுக நடிகர்களை வைத்து உருவாகிவரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனரின் அடுத்த படம்.. படப்பிடிப்பு பணிகள் நிறைவு
Published on

சென்னை,

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டுமே ரூ.60 கோடி வசூல் செய்துள்ளது.

தற்போது, இயக்குனர் சிதம்பரம் "பாலன்" என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜய்யின் 'ஜன நாயகன்', யாஷின் 'டாக்ஸிக்' ஆகிய படங்களை தயாரித்து வரும் கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம், கலை இயக்குனர் அஜயன் சல்லிசேரி ஆகியோர் இப்படத்திலும் பணியாற்றி வருகின்றனர். இந்த படத்திற்கு 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் கதை எழுதியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. புதுமுக நடிகர்களை வைத்து உருவாகிவரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com