ஷாருக்கானின் சகோதரியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை - பகிர்ந்த இயக்குனர்


Mansoor Khan Reveals Kajol Refused To Play SRK’s Sister In Josh
x

பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் மன்சூர் கான்.

சென்னை,

பாலிவுட்டில் 'கயாமத் சே கயாமத் தக்', 'ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்' போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் மன்சூர் கான்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், கடந்த 2000-ம் ஆண்டு வெளியான 'ஜோஷ்' பட கதாபாத்திர தேர்வு பற்றி கூறினார். அவர் கூறுகையில்,

"'ஜோஷ்' படத்தில் ஷாருக்கானின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கஜோலைதான் அணுகினேன். அவரிடம் ஜோஷ் கதையை கூறி, கதாபாத்திரத்தை விளக்கினேன். ஆனால், அவர் திட்டவட்டமாக நடிக்க மறுத்துவிட்டார். பின்னர், ஐஸ்வர்யா ராய் கதை கேட்டு ஒகே சொன்னார். 'ஜோஷ்'தான் ஐஸ்வர்யாராயின் சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

இதற்கு முன்பு, கடந்த 1995-ல் 'டிடிஎல்ஜே' மற்றும் 1998-ல் 'குச் குச் ஹோதா ஹை' ஆகிய படங்களில் கஜோல், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story